இன்றைய ராசி பலன் !

Today horoscope
ராசி பலன்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்  இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரியுடன் இணக்கம் ஏற்படும். உத்தியோக நுணுக்கங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அமையும்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அற்புதமான நாளாக அமைய போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் வெளி இடங்களில் புதிய நட்பை வளர்த்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனதில் உளைச்சல் இருக்கும். பெண்களுக்கு வேலை பளு அதிகரித்து காணப்படும். 

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வியாபாரத்தில் அவர்களுக்கு நிறைய நன்மைகள் நடைபெறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் என்றுமில்லாத அளவிற்கு என்று உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். பெண்களுக்கு மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறும். 

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனக்கவலைகள் அகன்று புது பொலிவுடன் காணப்படுவீர்கள். நீண்டநாள் துயரங்கள் முடிவுக்கு வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் கூட்டாளிகளுடன் அனுசரணையாக செல்வது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்கள் நேரத்தை விரயம் ஆகாமல் இருப்பது உத்தமம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பெண்களுக்கு புதிய பொருள் வாங்கும் யோகம் உண்டு. பொறுமையுடன் இருக்க வேண்டிய நாள்.கடந்த கால நினைவுகளை அசை போட்டுப் பார்க்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. 

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் . தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பெரிய தொகைகளை ஈடுபடுத்துவீர்கள். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும்.

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாக வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நல்ல நாளாக அமையும். வாடிக்கையாளர்கள் நன்மதிப்பு பெறுவீர்கள்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத சில திடீர் திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கவலைகள் நீங்கி படிப்படியான முன்னேற்றம் பெருகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களுடன் ஆரோக்கியமான போட்டி நிலவும்.

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்வதை தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தொலை தூர பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புகள் அமையும்.

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மற்றவர்களுடைய மனதை புரிந்து கொண்டு நடந்து கொள்வீர்கள். கணவன் மனைவி இடையே புதிய புரிதல் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் தொகை கைக்கு வரும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் குதூகலம் காணப்படும். உறவினர்களின் வருகை மனதுக்கு மகிழ்ச்சியை தரும் வகையில் அமைய இருக்கிறது. பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாளாக இருக்கும்.

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் கூடுதல் கவனமுடன் செயல்படுவது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மறையும். பெரியவர்களுடைய ஆசீர்வாதத்தை பெறுவீர்கள்.