
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சற்று கசப்பானதாக அமையும் இருப்பினும் அதிலிருந்து வாழ்க்கை படங்களை கற்று கொள்ளலாம்.உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். நீங்கள் நீண்ட காலமாக சுமந்து வந்த காயத்திலிருந்து விடுபடலாம்.

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.உங்கள் மனதை கட்டுப்படுத்துங்கள்.எதிர்காலத்தை நினைத்து அதிக கவலை வேண்டாம்.

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் உடல்நலத்தில் கவனம் தேவை.வெளியில் செல்லும் முன்பு நிம்மதியான மனநிலையில் செல்லுங்கள்.வீண் கவலை வேண்டாம்.உங்கள் வாழ்வில் மிக முக்கியமான நபரை சந்திப்பீர்கள்.

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் வேலை செய்யும் இடத்தில் வீண் பிரச்சனை தேவையில்லை.உங்களிடம் உள்ள குறைகளை அறிய கவனம் செலுத்துங்கள்.குழந்தைகளுடன் சிறிது நேரம் ஒதுக்குங்கள்.

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் அடுத்து என்ன வரப்போகிறது என்று நினைத்து குழம்ப வேண்டாம்.இன்றைய பொழுதில் கவனம் செலுத்துங்கள்.நினைத்த காரியம் நடக்க சிறிது காலம் எடுக்கும்.

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.நினைத்த காரியம் நடக்கும்.சிறிது நிதானம் தேவை.உங்கள் வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களில் நேரம் அதிகம் ஒதுக்குங்கள்.

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களால் நிறைவேற்ற முடியாத ஒரு பணிக்காக யாராவது உதவி கரம் நீட்ட வாய்ப்புள்ளது.மாணவர்கள் இன்று கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பிடித்த வேலைகளை செய்யுங்கள் அதன் மூலம் மனதில் அமைத்தால் உண்டாகும்.குடும்பத்தில் அமைதியான நிலை உண்டாகும்.பண விஷயத்தில் சற்று கவனம் தேவை.பிகவும் பிடித்த நபருடன் சுற்றுலா செய்யுங்கள்.

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் ஒரு புதிய வாகனத்தை வாங்கலாம் மற்றும் நீண்ட தூரம் பயணம் செய்ய விரும்பலாம்.குடும்பத்தினருடன் நீண்ட பயணம் செய்யலாம்.

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிகப்படியான அழுத்தத்தை எடுத்துக்கொள்வது உங்கள் ஆரோக்கியத்தை மோசமாக்கும், எனவே அதை எளிதாக எடுத்துக் கொள்ளுங்கள்.நல்ல முதலீடுகளுடன் நீங்கள் நிதி ரீதியாக பாதுகாப்பாக இருக்க முடியும்.

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் ஏற்பட்ட காயங்களை நினைத்து கவலை படாமல் அடுத்து நடக்க இருப்பதை நினைத்து மகிழ்ச்சி கொள்ளுங்கள்.புயலுக்கு பின் அமைதி என்பது போல வாழ்க்கையில் கஷ்டம் ஏற்பட்டால் இன்பம் பிறகு ஏற்படும் என்பதை நம்புங்கள்.

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழில்முறை முன்னணியில் நீங்கள் உங்கள் திறமையை நிரூபிக்க வாய்ப்புள்ளது.இந்து புதிய முயற்ச்சிகளில் நீங்கள் ஈடுபடலாம்.குடும்பத்தில் சின்ன பிரச்சனைகள் தோன்றி மறையும்.
இதையும் படிங்க : இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் !



