இன்றைய தங்கம் விலை

gold and silver rate
தங்கம் மற்றும் வெள்ளி விலை

சென்னையில் இன்று (மார்ச் 16) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,228 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. நேற்று இதன் விலை 4,229 ரூபாயாக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ஒரு ரூபாய் மட்டும் குறைந்துள்ளது.

அதேபோல, நேற்று 33,832 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 8 ரூபாய் சரிந்து 33,824 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை இன்றும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.71.70 ஆக இருந்தது. இன்று அது ரூ.71.80 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 71,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.