இன்றைய தங்கம் விலை

தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர்.பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 264 ரூபாய் உயர்ந்து 35 ஆயிரத்து 424 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கிராமுக்கு 33 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 428 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபாய் 30 காசு அதிகரித்து 75 ரூபாய் 70 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. பவுனுக்கு 264 ரூபாய் உயர்ந்துள்ளது.