இன்றைய தங்கம் விலை

gold and silver rate
தங்கம் மற்றும் வெள்ளி விலை

தங்கம் விலை இன்றும் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. பவுனுக்கு 208 ரூபாய் குறைந்துள்ளது.

2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது.

இந்த நிலையில் இன்றும் தங்கத்தின் விலை கணிசமாக குறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.26 குறைந்து ரூ.4,238க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.208 குறைந்து ரூ.33,904க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.37,032க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை 1.20 ரூபாய் குறைந்து 1 கிராம் ரூ.71.60க்கு விற்பனையாகிறது. அதேபோல 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.71,600 ஆக உள்ளது.