ஒரே நாளில் சவரனுக்கு ரூ.608 குறைவு

gold and silver rate
தங்கம் மற்றும் வெள்ளி விலை

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 35 ஆயிரத்துக்கு கீழ் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர்.

அந்த வகையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.608 குறைந்து ரூ.34,128-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.76 குறைந்து ரூ.4,266-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.60 உயர்ந்து ரூ.72-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.72,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது தங்கம் வாங்க விரும்புவோருக்கு பெறும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.