இன்றைய தங்கம் விலை

gold and silver rate
தங்கம் மற்றும் வெள்ளி விலை

பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன.

இந்தநிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 24 உயர்ந்து ரூ.4355க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.192 உயர்ந்து ரூ.34,840க்கு விற்பனையாகிறது.

இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் 37,912 ரூபாய்க்கு விற்பனையாகிறது.