Corona virus: தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு !

தமிழகத்தில் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்

Corona virus : கொரோனா தொற்றின் 2 ம் அலை தமிழகத்தை வெகுவாக தாக்கியது.இதன் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.இந்த ஊரடங்கு காலத்தில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.தமிழகத்தில் இதுவரை வெற்றிகரமாக கெரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று அதில் நிறைய மக்கள் இலவச தடுப்பு ஊசிகளை செலுத்தி கொண்டனர்.

தமிழகத்தில் இன்று 5,104 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,15,986.Corona virus

இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை: 1,11,773. மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 34,15,986. இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 5,104.இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 26 பேர் உயிரிழந்தனர். 16 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். 10 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர்.

இன்று மாநிலம் முழுவதும் 40468 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 24368 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 9428​​​​​​​ ஐசியூ படுக்கைகளும் பயன்பாட்டுக்குத் தயாராக இருக்கின்றன.

இதையும் படிங்க : wedding in metaverse : Metaverse இல் திருமண வரவேற்பு !