covid cases in tn:தமிழகத்தில் இன்று 719 பேருக்கு கொரோனா !

தமிழகத்தில் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் இன்று 719 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 1,01,820 .இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 719. சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 128.

இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 10 பேர் உயிரிழந்தனர். 3 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். 7 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர்.

சென்னையில் 128 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது.corona cases in tamilnadu

தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26,86,683.