தமிழகத்தில் இன்று 718 பேருக்குக் கொரோனா தொற்று !

தமிழகத்தில் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் இன்று 718 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 27,27,635. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 5,58,148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் 117 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது.தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26,82,943.

இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 1,00,312. மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 27,27,635.இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 11 பேர் உயிரிழந்தனர்