Group 1 Results: டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு

tnpsc group 1
tnpsc group 1

Group 1 Results: துணை ஆட்சியர், டிஎஸ்பி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், வணிக வரி உதவி ஆணையர், மாவட்டத் தீயணைப்பு அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள 66 காலிபணியடங்களை நிரப்பும் வகையில் அரசுப் பதவிகளுக்கு தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணையம் TNPSC நடத்திய குரூப்-1 தேர்வு, கடந்த ஆண்டு ஜனவரி 3-ம் தேதி நடைபெற்றது.

இந்த தேர்வை 1,31,701 பேர் எழுதினர். இவர்களுக்கான முதன்மைத் தேர்வு மே 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும், கொரோனா பெருந்தொற்று காரணமாக தேர்வு தேதிகள் ஒத்திவைக்கப்பட்டன.

இதற்கிடையே, உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில், தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான அரசாணையில் சில திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதன் அடிப்படையில் முதல்நிலை தேர்வின் முடிவுகள் தயார் செய்யப்பட்டு வந்தன.

இந்நிலையில், குரூப் 1 தேர்வு முதல்நிலை தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதன்படி, 3,800 பேர் முதல்நிலைத் தேர்வில் தேர்வாகியுள்ளனர். தொடர்ந்து, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான முதன்மைத் தேர்வு 2022 மார்ச் 4,5,6 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, முதன்மைத் தேர்வுக்குத் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள், தங்களின் சான்றிதழ்களைத் தேர்வாணைய இணைய தளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ் பதிவேற்றம் டிசம்பர் 12 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதி வரை நடைபெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Bank Strike: வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம்