TNPL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

TNPL jobs
TNPL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட் (TNPL) நிறுவனத்தில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தற்போது காலியாக உள்ள Semi Skilled (Chemical/ Mechanical/ Electrician/ Instrumentation/ Instrument/ Instrument Mechanic) பணிக்கென பல்வேறு பணியிடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியுள்ள மற்றும் திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு தேவையான அனைத்து தகவல்களையும் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தற்போது வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி Semi Skilled (Chemical/ Mechanical/ Electrician/ Instrumentation/ Instrument/ Instrument Mechanic) பணிக்கு என்று மொத்தம் 84 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கு ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் / பல்கலைக்கழகங்களில் SSLC with NTC அல்லது பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Diploma முடித்திருக்க வேண்டும். கல்வித் தகுதி பற்றிய முழு விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

முன் அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் குறைந்தது 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

தமிழ்நாடு காகித நிறுவன வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்த பட்சம் 30 வயது நிறைந்தவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வுகள் குறித்த தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை பார்வையிடவும்.

TNPL ஊதிய விவரம்:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அரசு ஊதிய விதிமுறைப்படி முறையாக தகுதியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPL தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் shortlist செய்யப்பட்ட பின் நேர்காணல் (INTERVIEW) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க 20.01.2022 அன்று இறுதி நாளாகும். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட ஆன்லைன் படிவங்களை அறிவிப்பில் கொடுத்துள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் வழியாக அனுப்ப 27.01.2022 அன்று இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆர்வமுள்ள மற்றும் தகுதி வாய்ந்த நபர்கள் இப்பணிக்கு சரியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இதையும் படிங்க: Omicron: சென்னையில் ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு