TN Weather: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு எச்சரிக்கை

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு எச்சரிக்கை
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு எச்சரிக்கை

TN Weather: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மன்னார் வளைகுடா மற்றும் தமிழகத்தின் உட்பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும்.

இன்று ஏப்ரல் 7ம் தேதி தென் கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஏப்ரல் 8,9 தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்யக்கூடும்.

ஏப்ரல் 10ம் தேதி தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நாளை ஏப்ரல் 8ல் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகலாம். மேலும் ஏப்ரல் 8,9 தேதிகளில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50கிமீ வேகத்தில் பலத்த சூறாவளி வீசக்கூடும். இதனால் அடுத்த 2 நாட்கள் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Actor Vijay: விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு விஜய் கடும் எச்சரிக்கை!