ஊரடங்கால் காய்கறி விலை அதிகரிப்பு – தமிழகம் !

தமிழகத்தில் கரோனா பரவலை தடுக்க தமிழக அரசு மேலும் ஒரு வரம் தளர்வுகள் இல்லாத ஊரடங்கை அறிவித்துள்ளது.அதனால் இன்று ஒரு நாள் மட்டும் அணைத்து கடைகளும் இயங்க அனுமதி அளித்துள்ளது.

இந்த ஊரடங்கு காலத்தில் காய்கறிகளை அதிக விலைக்கு விற்றால் அத்தியாவசியப் பொருள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி எச்சரித்துள்ளார்.

மேலும் அவர் கூறுவது,இந்த ஊரடங்கு காலத்தில் சில வணிக நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் இந்த இக்கட்டான நிலையினை பயன்படுத்தி காய்கறிகளை செயற்கையாக கூடுதல் விலைக்கு விற்பது அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.

இது மக்களை சுரண்டும் ஒருசெயல்.இது குறித்து சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். காய்கறிகளை அதிக விலைக்கு விற்கும் வியாபாரிகள் மற்றும் நிறுவனங்கள் மீது அத்தியாவசிய பொருள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார் .