TN news : முழு ஊரடங்கில் பயணிகள் தவிப்பு !

TN news : முழு ஊரடங்கில் பயணிகள் தவிப்பு !
TN news : முழு ஊரடங்கில் பயணிகள் தவிப்பு !

TN news : கொரோனா தொற்றின் 2 ம் அலை இந்தியாவை வெகுவாக தாக்கியது.இந்த பரவலை தடுக்க அரசு ஊரடங்கை அறிவித்தது.இதன் காரணமாக தொற்று எண்ணிக்கை குறைந்து வந்தது.தற்போது மீண்டும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் பரவலை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு நாளில் திருமணம் போன்ற விழாக்களுக்குச் செல்பவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்தது. TN news

மேலும் இன்று பொதுமக்கள் தேவைக்காக விமானம் மற்றும் ரயில் சேவை மட்டும் இருக்கிறது. இந்த இடங்களுக்கு செல்லும் மக்கள் தங்கள் வாகனம், வாடகை வாகனத்தில் செல்ல காவல்துறை அனுமதி அளித்து இருக்கிறது. ஆனால் வெளி மாவட்டத்தில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையம், சென்னை செண்ட்ரல் வந்த பொதுமக்களுக்கு வாகனம் கிடைக்காமல் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் வாடகை ஆட்டோ, வாடகை கார்கள் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள்.

இதையும் படிங்க : நீளமான மற்றும் அடர்த்தியான கூந்தல் வேண்டுமா !