TN news : இனி முகக்கவசம் கட்டாயமில்லை

TN news
இனி முகக்கவசம் கட்டாயமில்லை

TN news : : கொரோனா தொற்றின் 2 ம் அலை தமிழகத்தை வெகுவாக தாக்கியது.இதன் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.இந்த ஊரடங்கு காலத்தில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது.இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.தமிழகத்தில் இதுவரை வெற்றிகரமாக கெரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று அதில் நிறைய மக்கள் இலவச தடுப்பு ஊசிகளை செலுத்தி கொண்டனர்.

தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.இதன் காரணமாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது.

கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் குறைந்து வருகிறது. இதை அடுத்து கடந்த மார்ச் 31 ஆம் தேதியோடு கொரோனா நெறிமுறைகளும், கட்டுப்பாடுகளும் முடிவுக்கு வருவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.நாடு முழுவதும் COVID-19 நிலைமை கணிசமாக மேம்பட்டுள்ளதால், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா மற்றும் டெல்லி போன்ற பல மாநிலங்கள் கட்டாயமாக முகமூடி அணிவது மற்றும் சமூகக் கூட்டங்களுக்குத் தடை உள்ளிட்ட தொற்றுநோய் தொடர்பான கட்டுப்பாடுகளை நீக்க முடிவு செய்துள்ளன.TN news

இதையும் படிங்க : CUET 2022 : ஜூலை மாதம் CUET தேர்வு

மேலும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழக அரசு கொரோனா வைரஸ் தொடர்பான அனைத்து தடைகளையும் நீக்குவதாக அறிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல் தவணை தடுப்பூசியை 92 சதவீதம் பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 75 சதவீதம் பேரும் செலுத்திக் கொண்டிருப்பதன் காரணமாக தமிழகம் முழுவதும் தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.TN news

மேலும் தனி மனித இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்டவற்றை சுய விருப்பத்தின் அடிப்படையில் பொது மக்கள் பின்பற்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

( No mask and social distancing in tamilnadu )