tn news : வண்டலூர் பூங்காவில் கரடி உயிரிழப்பு!

tn news : வண்டலூர் பூங்காவில் கரடி உயிரிழப்பு!
tn news : வண்டலூர் பூங்காவில் கரடி உயிரிழப்பு!

tn news : செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா சிறந்த பொழுதுபோக்கு தலமாகும்.பூங்கா ஊழியர்கள் 70 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து ஜனவரி 31ம் தேதி வரை பூங்கா மூடப்பட்டது. 31-ம் தேதிக்குப் பிறகே எப்போது பூங்கா திறப்பது என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பிப்ரவரி 3-ம் தேதி முதல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறக்கப்பட்டது.

இதுதொடர்பாக, பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள உத்தரவில், கடந்த மாதம் 17-ம் தேதி வண்டலூர் உயிரியல் பூங்கா மூடப்பட்டது. தற்போது கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி ஜனவரி 3-ம் தேதி வண்டலூர் உயிரியல் பூங்கா திறக்கப்பட்டது.tn news

தற்போது வண்டலூர் உயிரியல் பூங்காவில் கரடி ஒன்று உயிரிழந்ததாக நிர்வாகம் தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தது. உயிரிழந்த கரடியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரேதப் பரிசோதனை முடிவுக்குப் பிறகே கரடி உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1855-ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ‘மெட்ராஸ் பூங்கா’ என்ற பெயரில் விலங்கியல் பூங்காவை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அமைத்தார்கள். பின்னர் விரிவாக்கம் செய்வதற்காக 1985-ம் ஆண்டு இந்தப் பூங்கா வண்டலூருக்கு மாற்றப்பட்டதுtn news

வண்டலூர் பூங்காவில் உள்ள விலங்குகளை காண ஆண்டுக்கு 25 லட்சம் பார்வையாளர்கள் வருகை வருகிறார்கள்.தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் அதிக அளவில் பார்வையாளர்கள் வருகிறார்கள்.

இதையும் படிங்க :Corona virus: தமிழகத்தில் 8000க்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

இதையும் படிங்க : Free Laptop: பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச லேப் டாப்..!