TN news : 144 தடை உத்தரவு

tn-news-144-imposed-in-chidambaram
144 தடை உத்தரவு

TN news : சிதம்பரம் நடராஜர் கோஅத்துடன் பூலோக கைலாசம் என்றும் கைலாயம் என்றும் அறியப்பெறுகிறது. இத்தலம் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் என்னும் நகரில் அமைந்துள்ளது.

ஆடலரசன் ஆலயாத்தில், கனகசபை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்க கோரி தொடர் போராட்டங்கள் ஏற்கெனவே நடைப்பெற்றதையடுத்து, இன்று முதல் சிதம்பரம் நடராஜர் சன்னதி இருக்கும் நகர் பகுதியில், இன்று முதல் 144 தடை உத்தரவு ஒரு மாத காலத்திற்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது

மேலும் ஆடல் கடவுள் என்று அழைக்கப்படும் நடராஜர் ஒரே இடத்தில் இல்லாமல் ஆடிக்கொண்டே இருக்கிறார். வலது புற மேல் கையில் உடுக்கையை கொண்டிருப்பது இந்த உலகம் ஒலியின் மூலம் துவங்கியது என்பதைக் குறிப்பதாக நம்பப்படுகிறது. இடது புற மேல் கையில் உள்ள நெருப்பு எந்நேரமும் அழித்து விடுவேன் என்ற எச்சரிக்கையை கொடுக்கின்றது. வலது புற கீழ் கையில் காப்பாற்றுவதை குறிப்பதை போன்று, பயப்படாதே நான் இருக்கிறேன் என்று கூறுகின்றது. இடது புற கீழ் கையால், உயர்த்தி இருக்கும் காலைக் காட்டி, தன்னிடம் அடைக்கலம் புகுவோருக்கும், தன்னை வணங்கும் பக்தர்களுக்கான இடம் என்பதை உணர்த்துகிறது.

சிதம்பரம் உட்கோட்ட நிர்வாக நடுவர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் ரவி ஓர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரம், ஸ்ரீ சபாநாயகர் திருக்கோயிலில் கனகசபையின் மீது ஏறி சாமி தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி மறுத்தது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் போராட்ட குழுவினரால் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தது.TN news

இதையும் படிங்க : CM MK stalin : சர்வதேச கண்காட்சியில் கலந்துகொள்ள முதல்வர் ஸ்டாலின் துபாய் பயணம்

அரசியல் கட்சிகள், பக்தி பேரவைகள் போன்றவைகள் ஒரு மாத காலத்திற்கு செய்தல் கூடாது என இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 144-ன்படி தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இது இன்று முதல் முதல் உடனடியாக அமுலுக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.