scheme for girl child:தமிழக அரசின் அறிவிப்பு !

Tamil Naadu Government updates NEET Bill Opposition
தமிழ்நாட்டிற்கு '4.0' திட்டம் : இளைஞர்களை மையப்படுத்தி புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறது தமிழக அரசு

பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களின் கல்வி, திருமண உதவித்தொகை போன்றவற்றை மையமாகக் கொண்டு தமிழக அரசு சார்பாக பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தில் மொத்தம் இரண்டு பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவின் கீழ் ஒரு பெண் குழந்தை உள்ள குடும்பத்துக்கு 50,000 ரூபாய் உதவித் தொகை கிடைக்கும். அதேபோல, இரண்டாவது பிரிவின் கீழ் இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் உள்ள குடும்பத்துக்கு குழந்தை ஒன்றுக்கு தலா 25,000 ரூபாய் வழங்கப்படும்.

டெபாசிட் காலத்திலிருந்து 5 வயது வரை மாதம் ஒன்றுக்கு ரூ.150 என்ற அளவில் கிடைக்கும். 18 வயது வரை இந்த உதவி வந்துகொண்டே இருக்கும். குடும்ப வருமானம் ஆண்டுக்கு 72,000 ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும் என்பது இத்திட்டத்தின் முக்கிய நிபந்தனையாகும்.

கிராமப்புற பெண்கள் மேம்பாட்டு அதிகாரிகள் போன்றோரை அணுகி இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். பெண் குழந்தைக்கு மூன்று வயது முடிவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.