தமிழக அரசின் அடுத்த அதிரடி அறிவிப்பு..வீட்டு வாடகையுடன் விடுமுறை !

Tamil Naadu Government updates NEET Bill Opposition
தமிழ்நாட்டிற்கு '4.0' திட்டம் : இளைஞர்களை மையப்படுத்தி புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறது தமிழக அரசு

அரசு ஊழியர்கள் மகப்பேறுகால விடுப்பில் சென்ற 6 மாதங்களுக்கு வீட்டு வாடகைப்படி வழங்கப்படும் மனித வள மேலாண்மை துறை விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அடிப்படை விதிகளில் விதி 44ன் கீழ் அறிவுறுத்தங்களில் 4(b)ல் ஒரு அரசு ஊழியர் மகப்பேறு விடுப்பில் இருக்கும் போது ஊதியமில்லா அசாதாரண விடுப்பு தவிர்த்து ஆறு மாதங்களுக்கு மட்டுமே வீட்டு வாடகைப்படி பெறத்தகுதியுடையவர் ஆவர்.

இந்நிலையில் அரசாணை எண்.89, மனிதவள மேலாண்மைத் துறை, அடிப்படை விதி 101(a)ன் கீழ் வழங்கப்படும் மகப்பேறு விடுப்பு ஒரு சிறப்பு சலுகை என்பதால் மகப்பேறு விடுப்பு காலம் முழுமைக்கும் வீட்டு வாடகைப்படி வழங்கப்படும்.

அடிப்படை விதிகளில் விதி 44ன் கீழ் அறிவுறுத்தங்களில்4(b)ல் ஒரு அரசு ஊழியர் விடுப்பில் இருக்கும் பொழுது ஊதியமில்லா அசாதாரண விடுப்பு தவிர்த்து ஆறு மாதங்களுக்கு மட்டுமே வீட்டு வாடகைப்படி பெறத்தகுதியுடையவர் ஆவர் என்றிருந்த நிலையில் , மகப்பேறு விடுப்பு உட்பட” என்ற வார்த்தை அவ்விதியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மேற்படி திருத்தத்தின் மூலம் மகப்பேறு விடுப்பின்போது பெண் அரசு ஊழியர்கள் அவ்விடுப்புக்காலம் முழுமைக்கும் தடையின்று வீட்டுவாடகைப்படி பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தமிழ்நாட்டில் மெகா தடுப்பூசி முகாம் !