TN Government: பேருந்து நிலையங்களை தனியார் மயமாக்க தமிழக அரசு முடிவு

பேருந்து நிலையங்களை தனியார் மயமாக்க தமிழக அரசு முடிவு
பேருந்து நிலையங்களை தனியார் மயமாக்க தமிழக அரசு முடிவு

TN Government: சென்னையில் புதிதாக அமைக்கப்பட உள்ள 2 பேருந்து நிலையங்களின் பராமரிப்பு மற்றும் நிர்வாகப் பொருப்பை தனியார் வசம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்த வண்ணமே இருந்து வருகிறது. அதிலும் பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். இந்த போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையிலும், பொதும்மக்களின் வசதிக்காகவும் 2 புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றாக ரூ.400 கோடி செலவில் வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் ஒரு பேருந்து நிலையமும், திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை அருகே ரூ. 300 கோடி செலவில் புதிய பேருந்து நிலையமும் அமைக்கப்பட உள்ளது.

இதில் வண்டலூர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பணிகள் 60 % நிறைவடைந்துவிட்டன. அடுத்த ஆண்டு இந்த பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த 2 பேருந்து நிலையங்களின் பராமரிப்பு மற்றும் நிர்வாக பொறுப்புகளை தனியார் வசம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிக்க பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜே.எல்.எல் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

.கடந்த ஆட்சியில் விமான நிலையங்களின் பராமரிப்பு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதை எதிர்த்தும், தனியார் மயமாக்கலை கண்டித்தும் திமுக பல்வேறு ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் நடத்தியது. ஆனால் தற்போது பெரும்பாலான பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பேருந்து நிலையத்தை தனியார் மயமாக்க திமுக அரசு திட்டமிட்டிருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: Chicken cutlet: சூப்பரான ஸ்நாக்ஸ் சிக்கன் கட்லெட்