தமிழகத்தில் இன்று 1,551 பேருக்கு கொரோனா..!

தமிழகத்தில் இன்று மேலும் 1,551 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் இன்று 21 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 17,559- ஆக உள்ளது.

தொற்று பாதிப்பைக் கண்டறிய இன்று 1 லட்சத்து 62 ஆயிரத்து 641 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 1,768-பேர் குணம் அடைந்துள்ளனர். சென்னையில் இன்று 182 -பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.