தமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் !

mega sport city
விளையாட்டு வீரர்களுக்காக மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி

தமிழக முதல்வர் தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வெள்ள நிவாரணம், தொழில்துறை முதலீடுகளுக்கான அனுமதிமற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் பரவலாக தொடர்ந்து கனமழைபெய்து வருகிறது. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட வேண்டியுள்ளது

இது குறித்து ஆலோசிக்க தமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் தலைமைச் செயலர் இறையன்பு, நிதித் துறை செயலர் நா.முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் வெள்ள நிவாரணம் வழங்குதல், நிதி நிலைமை குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.