சென்னையில் 14 தொகுதிகளுக்கு குறையாமல் தி.மு.க. போட்டியிடும்

ராயபுரம், விருகம்பாக்கம், தியாகராயநகர், மயிலாப்பூர் ஆகிய 4 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றிபெற்றது. ஆர்.கே.நகர் தொகுதியில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெற்றிபெற்றார்.

தி.மு.க. வெற்றிபெற்ற அனைத்து தொகுதிகளிலும் அதிக ஓட்டுகள் பெற்று இருந்தன. இந்த சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கிய தி.மு.க. அதிக இடங்களில் தமிழகம் முழுவதும் வேட்பாளர்களை நிறுத்தி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளது.

அந்த வகையில் சென்னையில் 14 தொகுதிகளுக்கு குறையாமல் தி.மு.க. நிற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையை மீண்டும் தி.மு.க. கோட்டையாக மாற்றும் வகையில் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளது.

தற்போது உள்ள 11 தொகுதி எம்.எல்.ஏ.க்களுக்கு பெரும்பாலும் சீட் கொடுக்க வாய்ப்பு உள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு ஒன்று அல்லது 2 இடங்கள் ஒதுக்கிவிட்டு மற்ற இடங்களில் தி.மு.க. போட்டியிட விரும்புகிறது