Tirupati : திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் காத்திருப்பு

Tirupati
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் காத்திருப்பு

Tirupati : திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க திருமலையில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். இந்த நிலையில் ,பெருமாளை தரிசிக்க வரும் சாதாரண பக்தர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது .சுவாமி தரிசனம் செய்ய 8 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.

கடந்த 11ம் தேதி முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலவச தரிசன டோக்கன் மையங்கள் கடந்த 12ம் தேதி திறக்கப்பட்டதால், டோக்கன் பெற ஒரு லட்சம் பக்தர்கள் வரை வரிசையில் காத்திருந்தனர். இதனால், பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பலர் மயங்கி விழுந்தனர். விமர்சனங்களைத் தொடர்ந்து, திருப்பதியில் இருந்து திருமலைக்கு டோக்கன் இல்லாமல் பக்தர்கள் செல்ல தேவஸ்தானம் அனுமதித்தது.

இந்த பக்தர்கள் அனைவரும் திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ வளாகத்தில் தங்க வைக்கப்பட்டு சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சுமார் 7 முதல் 8 மணி நேரம் பக்தர்கள் வைகுண்டம் அறையில் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் இலவச தரிசன டோக்கன் விரைவில் மீண்டும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோடையை முன்னிட்டு, சாதாரண பக்தர்களுக்கு தங்கும் வசதி, போக்குவரத்து, இலவச உணவு, வசதி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது.Tirupati

தற்போது கூட்டம் அதிகரித்துள்ளதால் பக்தர்கள் 7 அல்லது 8 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இவர்களுக்கு வைகுண்டம் வளாக அறையில் இலவசமாக பால் மற்றும் சிற்றுண்டி வழங்கப்படுகிறது. 4 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விஐபி பிரேக் தரிசனம் திங்கள்கிழமை முதல் மீண்டும் அமலுக்கு வருகிறது.

இதையும் படிங்க : coronavirus : டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா

திருமலையில் ரம்பாக்கீசா பேருந்து நிலையம், மத்திய வரவேற்பு அலுவலகம், வைகுண்டம் வளாகம் உள்ளிட்ட 18 இடங்களில் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

( titupati ezhumalaiyan temple devotees waiting for 8 hours )