கருமையாக இருக்கும் கழுத்து பகுதி மாற இதோ டிப்ஸ் !

உடல் நலத்தை எப்போதும் பேணி காக்கவேண்டும் .இதில் உடல்நலம் என்பது ஆரோக்கியமாகவும் மற்றும் தூய்மையாகவும் இருப்பதை குறிக்கும்.உடல் நன்றாக இருக்க உடல்பயிற்சி செய்வது போல் சருமம் நன்றாக இருக்க சில அழகு குறிப்புகளை பின்பற்ற வேண்டும்.


முகத்தை பராமரிப்பது போல் கழுத்து பகுதியையும் பராமரிக்க வேண்டும் நாம் முகத்தை பராமரிக்க போடும் பேக் ஐ பின் கழுத்துக்கும் போடவேண்டும்.மேலும் உடல் எடை அதிகம் இருப்போருக்கு கழுத்து பகுதி கருமையாக இருக்கும்.மற்றும் கழுத்தில் அணியும் நகைகளாலும் நிறம் மாறும்.

உருளைக்கிழங்கை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.பின்பு அந்த துண்டுகளோடு சிறிதளவு வெள்ளரிக்காய் சேர்த்து அரைத்து கொள்ளவேண்டும்.இந்த பேஸ்ட் ஐ கருமை இருக்கும் பகுதிகளில் போட்டு 20 கழித்து கழுவ வேண்டும்.

தினமும் குளிக்கும் பொது கடலை மாவு கொண்டு கருமை உள்ள பகுதிகளில் தேய்த்து வந்தால் மெல்ல மெல்ல நிறம் மாறும்.கடலைமாவுடன் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் கலந்து குளிக்கலாம்.இது நம் உடலுக்கு நல்ல நிறத்தை கொடுக்கும்.

ஒரு பாத்திரத்தில் மிதமான தண்ணீர் எடுத்து அதில் சிறிதளவு ரோஸ் வாட்டர் கலந்து கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு காட்டன் துணியில் அந்த தண்ணீரில் நனைத்து கழுத்து பகுதியை துடைத்து எடுத்த பின்பு பேஸ் போட்டால் நன்றாக செயல்படும்.