சுருள் முடியை எப்படி பராமரிப்பது?இதோ டிப்ஸ்..

பெண்களுக்கு தங்களது தலைமுடியை மிகவும் பிடிக்கும்.மேலும் சுருட்டை முடி இருந்தால் பார்க்க தோற்றம் அழகா தெரியும்.ஆனால் அதற்கு பராமரிப்பு மிக அவசியம்.சுருட்டை முடியை முறையாக பராமரித்தல் வறட்சி தன்மை போன்றவை இருக்காது.

பொதுவாக தலைக்கு குளிக்க செல்லும் முன்பு எண்ணெய் தடவி சிக்கு எடுத்த பிறகு குளித்தால் அதிக முடி உதிர்வு இருக்காது.மேலும் முடி மென்மையாக இருக்கும்.

தங்கள் முடிக்கு ஏற்றவாறு ஷாம்பு, கண்டிசனரை பயன்படுத்துவது அவசியம். தற்போது கடைகளில் அணைத்து முடிகளுக்கு தகுந்த ஷாம்பு கிடைக்கிறது.அதை வாங்கி பயன்படுத்தவேண்டும்.அதிகம் ஷாம்பு பயன்பாட்டை தவிர்க்கவும்.

சுருட்டை கூந்தல் உடையவர்கள் பெரிய பற்களை உடைய சீப்பில்தான் சீவவேண்டும். அப்பொழுதுதான் எளிதாக சிக்கல் எடுக்க முடியும்.

சுருட்டை முடி உள்ளவர்கள் வாரம் ஒரு முறை தலைமுடியை பராமரிக்க பேக் போடவேண்டும்.அப்போது தான் முடி உடைவது குறைந்து ஆரோக்கியமாக முடி வளரும்.மேலும் தலைக்கு ஹேர் ட்ரையர் அதிகம் உபயோகிப்பதை தவிர்க்கவும்.