tips for glowing skin : அழகான சருமம் பெற இதோ டிப்ஸ் !

olive-oil-benefits-of-skin
ஆலிவ் எண்ணெயின் நன்மைகள்

tips for glowing skin : நாம் அன்றாட என்னதான் உடலை சுத்தம் செய்தாலும் இறந்த செல்கள் உடலில் தங்கிவிடும்.இந்த இறந்த செல்களை நீக்க நமக்கு தேவை ஸ்க்ரப்.ஸ்க்ரப் என்பது நம் சருமத்தில் உள்ள சொரசொரப்பான இடங்களில் தேய்த்தால் இறந்த செல்களால் ஆனா கடினமான சருமத்தை மென்மையாக மாற்றிவிடும்.

இதை நாம் வீட்டிலே தயாரிக்கலாம் இதனால் சருமத்திற்கு எந்த பிரச்னையும் வராது.இதற்கு தேவையான பொருட்கள் சிவப்பு அரிசி ஒரு 3 ஸ்பூன் ,பச்சை அரிசி 3 ஸ்பூன்,கடலைப்பருப்பு 2 ஸ்பூன்,பாசிப்பருப்பு 2 ஸ்பூன் ,துவரம்பருப்பு 2 ஸ்பூன் மற்றும் அதனுடன் சிறிதளவு ஜவ்வரிசி.tips for glowing skin

சிவப்பு அரிசி மற்றும் பச்சை அரிசி இவைகளில் இறந்த செல்களை நீக்கும் தன்மை அதிகம் உள்ளது.மேலும் கடலைப்பருப்பில் சருமத்தை இறுக்கக்கூடிய தன்மை உள்ளது.மேலும் துவரம்பருப்பில் சருமத்தை பளிச் என்று மாற்ற கூடிய தனிமை உள்ளது.

இவை அனைத்தையும் தனி தனியாக மிதமான சூட்டில் வறுத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.சூடு தணிந்த பிறகு ஒரு மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவேண்டும்.மேலும் வாசனைக்காக சிறிதளவு மஞ்சள் சேர்த்து அரைக்கலாம்.இந்த பொடியை குளிக்கும் முன்பு உடல் முழுதும் தேய்த்து குளித்து வர சருமம் மென்மையாக மற்றும் ஒளியாகவும் இருக்கும்.

இதையும் படிங்க : covid cases in tn:தமிழகத்தில் இன்று 1,489 பேருக்கு கொரோனா !