Tips for pimples scar on face: முகப்பருவால் உருவாகும் வடுக்களை போக்க !

Tips for pimples scar on face
முகப்பருவால் உருவாகும் வடுக்களை போக்க

முகத்தில் இளம் வயதில் பருக்கள் வரும் அது சரியான பிறகு காலப்போக்கில் அது வடுவாக மாறும்.முகத்தில் குழி குழியாக இருக்கும்.இதை நம் சரிசெய்து விடலாம்.அதற்கு இந்த டிப்ஸ் ஐ ட்ரை பண்ணுங்க.

நாவல் பழம் சருமத்தை இறுக்கி வைப்பதுடன் சிறந்த பொலிவையும் தருகிறது. நாவல் பழங்கள் இரத்தத்தை சுத்தம் செய்கிறது.முகப்பரு புள்ளிகள், வறட்சி மற்றூம் ஆரோக்கியமான சருமத்தின் வளர்ச்சியை தடுக்கிறது.

முதலில் ஒரு ஸ்பூன் தேன் அதனுடன் இரண்டு ஸ்பூன் நாவல் பழ கொட்டை நீக்கி மசித்த கூழ் சேர்த்து நன்றாக ஃபேஸ் பேக் போடவும்.இதை சருமத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து நன்றாக கழுவி விட வேண்டும்.

நாவல் பழக்கூழுடன் கடலை மாவு சேர்த்து தேவையான அளவு பன்னீர் சேர்க்கவும். இந்த மூன்றையும் நன்றாக குழைத்து முகத்தில் தடவி விடவும். இதை அடிக்கடி பயன்படுத்துவதால் சருமத்தின் எண்ணெய் சுரப்பை தவிர்க்க முடியும்.

நாவல் பழ பொடியுடன் பாலை சேர்த்து குழைக்கவும். இதை முகம் முழுக்க தடவி விடவும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி எடுக்கவும்.இப்படி செய்து வந்தால் முகத்தில் இருக்கும் வடுக்கள் நீங்கிவிடும்.