Thiruvonam Vratham: திருவோண விரதம் எப்படி இருப்பது?

Thiruvonam Vratham procedure
திருவோண விரதம் எப்படி இருப்பது

Thiruvonam Vratham: மாதா மாதம் வரும் திருவோண நட்சத்திரத்தை முன்கூட்டியே குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். திருவோண நட்சத்திரத்திற்கு முந்தைய நாள் இரவே உணவேதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

அன்று இரவில் பெருமாள் மந்திரங்களை உச்சரிப்பது, விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது நல்ல பலன் கொடுக்கும். மறுநாள் அதிகாலையில் எழுந்து சுத்தமாக நீராடி நல்ல உடை உடுத்திக் கொண்டு பெருமாள் கோவிலுக்கு சென்று அங்கு அவருக்கு துளசி மாலை சாற்றி வழிபடலாம்.

கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே பூஜை அறையில் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி விளக்கேற்றி வழிபட வேண்டும். பூஜையில் துளசி தீர்த்தம் வைத்து அந்த தீர்த்தத்தை நீங்கள் பருகலாம்.

இதையும் படிங்க: Horoscope Today : இன்றைய ராசி பலன்

மதியம் நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவில் உப்பு சேர்க்கக்கூடாது. உப்பு சேர்க்காத உணவை சாப்பிட்டால் ஒப்பிலியப்பன் பெருமானின் அருளாசி பரிபூரணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை. உப்பு சேர்க்காமல் உணவு தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு மாலையில் நெய்விளக்கு ஏற்றி பெருமாளுக்கு மந்திரங்களை உச்சரித்து பூஜை செய்யுங்கள். இரவில் பால் மற்றும் பழம் போன்றவற்றை எடுத்துக் கொண்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.

இவ்விரதத்தை பக்தி சிரத்தையுடன் கடைப்பிடித்து காலையில் வழிபாடு செய்யும் பொழுது நோய்கள் அனைத்தும் குணமாகும். மதிய வழிபாடு செய்யும் பொழுது செல்வம் அத்தனையும் பெருகும். மாலையில் வழிபாடு செய்யும் பொழுது செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும். இரவில் இறுதியாக நான்காம் ஜாம வழிபாடு செய்யும் பொழுது முக்தி பேறு கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே இவ்வாறு திருவோண விரதத்தை முறையாக கடைபிடித்தால் ஏழேழு பிறவிக்கும் 16 செல்வங்களும் அடையலாம்.

இதையும் படிங்க: Petrol Diesel Price: சென்னையில் பெட்ரோல் விலை நிலவரம்

(Thiruvonam Vratham procedure)