வங்கி வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை – சக்திகாந்த தாஸ்

வங்கி வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், வட்டி விகிதம் தொடர்ந்து 3.5 சதவீதமாகவே இருக்கும். ஜனவரி- மார்ச் மாத 4வது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி நேர்மறையாக மாறும்.

நம்பிக்கையை நோக்கி இந்தியாவின் மனநிலை சென்று கொண்டிருக்கிறது. செப்டம்பர் மாதத்தில் உயர்ந்த பணவீக்க விகிதம் அக்டோபர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாத காலக் கட்டத்தில் படிப்படியாக குறையும்.

இந்திய பொருளாதாரம் வளர்ச்சி உத்வேகம் பெறுவதற்கான நம்பிக்கை தரும் அறிகுறிகள் காணப்படுகின்றன. நாட்டின் பொருளாதாரம் அவநம்பிக்கையை இருந்து நம்பிக்கையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here