ADMK: அதிமுக வெற்றி செய்திக்கேட்ட அதிர்ச்சியில் திமுக வேட்பாளர் மயக்கம்

theni-district-urban-local-body-election-2022-dmk-candidate-faints-in-shock-over-aiadmk-victory
திமுக வேட்பாளர் மயக்கம்

ADMK: ஆண்டிப்பட்டியில் அ.தி.மு.க வேட்பாளர் வெற்றி செய்திக்கேட்ட அதிர்ச்சியில் தி.மு. க வேட்பாளர் மயக்கம் அடைந்தார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19ஆம் தேதி முடிவடைந்த நிலையில், இன்று வாக்கு எண்ணும் பணி காலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டு வாக்கு எண்ணிக்கையில் அ.தி.மு.க வேட்பாளர் பாலமுருகன் 678வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.அ வரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கார்த்திக் ராஜா 560 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். 118வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அதிர்ச்சியில் திமுக வேட்பாளர் கார்த்திக் ராஜா வாக்கு எண்ணிக்கை வளாகத்தில் மயக்கம் அடைந்தார்.

அவரை மீட்ட காவல்துறையினர் ஆம்புலன்ஸ் மூலமாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பெரும்பாலான இடங்களில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் திமுகவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசு வெடித்தும், பொதுமக்கள் இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

DMK candidate faints in shock over AIADMK victory

இதையும் படிங்க: Valimai: மளிகை பொருட்கள் வாங்கினால் பாப்கார்னுடன் வலிமை டிக்கெட் இலவசம்