Crime: தேனி மாணவியின் மரணத்தில் மர்மம் – உறவினர்கள் சாலை மறியல் ஏன்?

கல்குவாரி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு
கல்குவாரி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு

Crime: பெரியகுளம் தனியார் கல்லூரியில் உயிரிழந்த மாணவி இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி பெற்றோர் முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால்பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரியில் முதலாமாண்டு வேதியல் பட்டப்படிப்பு படித்து வரும் மாணவி ஜெனிலியா நேற்று கல்லூரி சார்பில் நடைபெற்ற உடற்பயிற்சியில் marcfh fast ல் ஈடுபட்ட போது உடல் நிலை குறைவு ஏற்பட்டு வலிப்பு வந்து மயங்கி கீழே விழுந்துள்ளார்.

இதனையடுத்து, அவரை அதே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் ஜெனிலியாவின் சகோதரி பவித்ராவை அழைத்து உனது சகோதரிக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறியதாக கூறப்படுகிறது

இந்நிலையில் கல்லூரி நிர்வாகம் பெற்றோருக்கு எந்தவித தகவலும் தெரிவிக்காமல் தனது சகோதரி உயிர் இழந்தது தெரியாமல் ஜெனிலியாவை தனியார் மருத்துவமனைக்கு ஆட்டோவில் கல்லூரி நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளது.

இதையும் படிங்க: CBSE class 12 Term 1: மாணவர்கள் கவனத்திற்கு ..CBSE 12 ஆம் வகுப்பு பருவம் 1 குறித்த அறிவிப்பு

காலையில் வேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மருத்துவமனை நிர்வாகம் ஏற்கனவே மாணவி இறந்துவிட்டதாக கூறியதைத் தொடர்ந்து தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மாணவி இறந்து பல மணி நேரம் ஆவதாக கூறியதைத் தொடர்ந்து தனது சகோதரி ஜெனிலியா இறந்துவிட்டதாக பவித்ரா பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இறந்த ஜெனிலியாவின் உடலை தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து பெற்றோரிடம் மருத்துவமனை நிர்வாகம் ஒப்படைத்தது. இந்நிலையில், இன்று பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஜெனிலியாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி கல்லூரி நிர்வாகத்தை வந்து அணுகியபோது கல்லூரி நிர்வாகம் சரியான பதில் அளிக்காத நிலையில் கல்லூரி நிர்வாகம் முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. இத்தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கல்லூரி நிர்வாகம் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: Corona Virus: தமிழகத்தில் கொரோனா 4ம் அலை பரவ வாய்ப்பு