முன்பெல்லாம் அணைத்து படங்களும் திரையரங்குகளில் வெளியாகின.மக்கள் புதிய படத்தை பார்க்க வேண்டும் என்றால் திரையரங்கு தான் செல்வார்கள்.தற்போது கொரோனா தொற்று வந்த பிறகு திரையரங்குகள் மூடப்பட்டன மேலும் அணைத்து படங்களும் OTT மூலம் வெளியாகின.
சூர்யா நடிப்பில் உருவான ‘சூரரைப் போற்று’ திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியானது. இதற்கு, தியேட்டர் உரிமையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
தற்போது தியேட்டர் உரிமையாளர் சங்கம் அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியீட்டுள்ளது.ஓடிடி-யில் வெளியான படங்களை திரையிடுவதில்லை என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மேலும் திரையரங்குகளில் வெளியாகிய படம் 4 வாரங்கள் கழித்து ஓடிடி-யில் வெளியாக வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்.



