Vaccine Camp: தமிழகத்தில் 18ஆவது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது

corona-vaccine-for-12-to-14-yrs-group
கொரோனா தடுப்பூசி

Vaccine Camp: தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற இந்த முகாம்கள், முழு ஊரடங்கு காரணமாக சனிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று (சனிக்கிழமை) மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் 50,000 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

தற்போதைய நிலையில் தமிழகத்தில் முதல் தவனை தடுப்பூசியை 87.35% பேரும், இரண்டாம் தவனை தடுப்பூசியை 61.46% பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர். 15முதல் 18வயதுடைய சிறுவர்கள் இதுவரை 54.34 லட்சம் பேர் கோவேக்சின் தடுப்பூசியை செலுத்தியுள்ளனர்.

ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவும் தன்மை கொண்டதால் குடும்ப தொடர்பு பாதிப்புகள் அதிகரிக்கும் சூழல் நிலவுகிறது. எனவே முதியோர்கள் கட்டாயம் இந்த மெகா தடுப்பூசி முகாமை பயன்படுத்தி பலன் பெற வேண்டும் என சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இன்று நடைபெறும் 18 வது மெகா தடுப்பூசி முகாமில் 60லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியும், 10.73 லட்சம் டோஸ் கோவேக்சின் தடுப்பூசியும் கையிருப்பில் உள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளில் 1,600 இடங்களில் இந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற உள்ளது. இந்த முகாமில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் நடைபெறும் முகாம்களின் இடங்கள் குறித்து https://chennaicorporation.gov.in/gcc/covid-details/mega-vac-det.jsp என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க: Anna univeristy: அண்ணா பல்கலையில் மாணவர் சேர்க்கை நிறுத்தம்