சாலை பணிக்கான டெண்டரில் அதிமுக தலைவர் முறைகேடு..!

சேலத்தில் சாலை பணிக்கான டெண்டரில் அதிமுக தலைவர் முறைகேடு செய்ததாக பாரதிய ஜனதா கட்சியினர் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

சேலம் மாவட்டம் மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு, இதற்கான டெண்டர் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இதற்கான டெண்டர் ஒப்பந்தம் நேற்றே பேசி முடிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து சேலம் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் சிலர் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.