தெலுங்கு நடிகர் ராஜபாபு காலமானார் !

பிரபல ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்தவர் நடிகர் ராஜபாபு.இவருக்கு வயது 64. உடல்நலக்குறைவால் காலமானார்.

முன்னணி நடிகர்களின் படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார்.சிறந்த நடிப்புக்காக ஆந்திர அரசின் நந்தி விருது உட்பட சில விருதுகளை பெற்றுள்ளார்.

உடல் நலக் குறைவு காரணமாக நேற்றிரவு உயிரிழந்தார். அவருடைய மறைவிற்கு நடிகர், நடிகைகள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.