திரையரங்குகளை திறக்க கோரிக்கை எங்கு தெரியுமா !

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் கொரோனா பரவலின் தாக்கத்தை கட்டுப்படுத்த மாநில மற்றும் ஒன்றிய அரசு தனி தனியே தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமலில் வைத்துள்ளது.

மக்களின் அத்தியாவசிய தேவைகளை கருத்தில் கொண்டு அரசு சில தளர்வுகளை அறிவித்தது.மேலும் சில கட்டுப்பாடுகள் கொரோனா தொற்றின் பாதிப்பு குறையும் வரை தொடரும் என்று தெரிவித்தது.

தற்போது தெலங்கானாவில்கொரோனா இரண்டாவது அலை தொடங்கியதில் இருந்தே தெலுங்கு திரையுலகம் முடங்கியுள்ளது. படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு, திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.

தெலுங்கு ஃபிலிம் சேம்பர் நிர்வாகிகள் நேற்று மாநில திரைப்படத் துறை அமைச்சர் தலசானி நிவாச யாதவை சந்தித்துப் பேசினர். அப்போது, திரையரங்குகளை திறக்க அனுமதிக்க வேண்டும். திரையரங்குகள் திறக்கப்படாததால் புதிய படங்கள் ஓடிடியில் வெளியிடப்படுகின்றன. இந்த வழக்கம் தொடர்ந்தால் திரையரங்குகளை நிரந்தரமாக மூடவேண்டிய நிலை ஏற்படும் என கேட்டுக் கொண்டனர்.