Telangana CM KCR: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதி

telangana-cm-chandrasekara-rao-hospitalized
முதல்வர் சந்திரசேகர் ராவ்

Telangana CM KCR: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

உடல்நிலை பாதிப்பு காரணமாக தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று சிகிச்சைக்காக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தன்னுடைய இடது கையில் சற்று பிரச்சினைகள் இருப்பதாக அவர் கூறியதை தொடர்ந்து அவர் ஐதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட அனைத்து விதமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நிலையில் அவருக்கு வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன, கட்சியினர் மற்றும் மாநில மக்கள் ஆகியோர் கவலைப்பட தேவையில்லை என்று அவர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவரது அலுவல் ரீதியான அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சந்திர சேகர ராவுக்கு துணையாக அவரது மனைவி சோபா ராவ், மகள் கவிதா ஆகியோரும் மருத்துவமனையில் உள்ளனர்.

Indisposed KCR rushed to hospital, declared stable

இதையும் படிங்க: AAP Victory: பிரதமர் மோடியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த கெஜ்ரிவால்