ஆகஸ்ட் 2ம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு!

கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன.மேலும் மாணவர்களின் நலன் கருதி பள்ளி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில் தற்போது இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.

இந்நிலையில், ஆகஸ்ட் 2ம் தேதி முதல் அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித்துறை பிறப்பித்துள்ள உத்தரவில், மாணவர்கள் சேர்க்கைப் பணி, பள்ளிக் கால அட்டவணை தயாரித்தல்,விலையில்லா பாடப் புத்தகங்கள் மற்றும் கற்றல் கற்பித்தலுக்கு தேவையான நலத்திட்டங்கள் வழங்குதல், பள்ளி வகுப்பறை மற்றும் பள்ளி வளாகங்களை தூய்மை செய்ய வேண்டும்.

மேலும் மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி வாயிலாக கற்ற பாட விவரங்களுக்கு ஏற்ப ஒப்படைப்புகள் வழங்கும் பணிகளை மேற்கொள்வதற்காக ஆகஸ்ட் 2ம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.