டாஸ்மாக் கடைகள் செயல்பட தமிழக அரசு உத்தரவு

கொரோனா பரவல் குறைவாக உள்ள மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்பட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு வரும் 14ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில், கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில், தொற்று குறைந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்கலாம் என்பது உள்ளிட்ட தளர்வுகளை அதிகாரிகள் பரிந்துரைத்தனர். ஆனாலும், டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.