இடமாற்றம் பெரும் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் !

தமிழகத்தில் சில ஐபிஎஸ் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வுடன் இடமாற்றம் உட்பட 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.

காவல்துறை கணினிமயமாக்கல் எஸ்.பியாக இருந்த வருண்குமார், திருவள்ளூர் மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். காவல்துறை ஏடிஜிபியாக(செயலாக்கம்) இருந்துவரும் ஏ.கே. விஸ்வநாதன், காவலர் வீட்டுவசதி வாரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக வன்னிய பெருமாள், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு ஏடிஜிபியாக ஆபாஷ் குமார், தீயணைப்புத் துறை டிஜிபியாக கரண் சின்கா ஐபிஎஸ், சீருடைப் பணியாளர் தேர்வாணைய ஏடிஜிபியாக சீமா அகர்வால், காவல்துறை நலப்பிரிவு ஏடிஜிபியாக சைலேஷ்குமார் யாதவ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.