Corona Virus: தமிழகத்தில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைவு..!

இந்தியாவில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு உயர்வு

Corona Virus: தமிழகத்தில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் சுமார் 1.28 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 22,238 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா உறுதிசெய்யப்படுவோரின் மொத்த எண்ணிக்கை 33,25,940 என்றாகியுள்ளது. முன்னதாக நேற்றைய தினம் தமிழ்நாட்டில் 24,418 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்த நிலையில், இன்று பாதிப்பு குறைந்து பதிவாகியிருக்கிறது. இது சற்று ஆறுதலளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 26,624 பேர் தமிழ்நாட்டில் கொரோனாவிலிருந்து குணமடைந்ததையடுத்து தற்போது கொரோனா சிகிச்சையிலிருப்போரின் மொத்த எண்ணிக்கை 2,03,926 என்றாகியுள்ளது. இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 30,84,470 என்றாகியுள்ளது.

இவையன்றி இன்று ஒரு நாளில் 38 பேர் கொரோனா உறுதியாகியுள்ளது. இவர்களில் 23 பேர் தனியார் மருத்துவமனையிலும், 15 பேர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தவர்களாவர். இதன்மூலம் இதுவரை தமிழ்நாட்டில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 37,544 என உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக பார்க்கையில், அதிகபட்சமாக சென்னையில் 3,998 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதையடுத்து கோவையில் 2,895-ம்; செங்கல்பட்டில் 2,426-ம் பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க: டிசைனர் ரெஸ்யூமை இருந்தால் நிச்சயமாக வேலை உண்டு..!