Corona virus: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக வெகுவாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் புதிதாக 320 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று 55 ஆயிரத்து 474 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் இன்று 52 ஆயிரத்து 851 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 320 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இது நேற்றைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கையான 348 ஐ விட சற்று குறைவு. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,009 ஆக உயர்ந்துள்ளது.
அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 946 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,07,595 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 4 ஆயிரத்து 437 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் நேற்று 92 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்த நிலையில், இன்று 89 ஆக குறைந்தது.
மேலும், கோவையில் 45 பேருக்கும், செங்கல்பட்டில் 36 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.
Corona cases in Tamil Nadu
இதையும் படிங்க: IPL 2022: ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் சாஹர்? சென்னை அணிக்கு பின்னடைவு



