தமிழகத்தில் மேலும் 5,185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் மேலும் 5,185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 6,46,128 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,தமிழகத்தில் மேலும் 5,185 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 6,46,128 ஆக அதிகரித்துள்ளது.

  • தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 5,91,811 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 5,357 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 44,197 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 68 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 10,120 ஆக உயர்ந்துள்ளது.
  • சென்னையில் இன்று ஒரே நாளில் 1,288 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 1,79,424 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் இதுவரை 79,06,698 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 95,301 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் மொத்தம் 190 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,90,244 பேர் ஆண்கள், 2,55,853 பேர் பெண்கள், 31 மூன்றாம் பாலினத்தவர்கள் ஆவர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.