செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையம் குத்தகைக்கு வேண்டும்- மு.க.ஸ்டாலின்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

  • செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தை மத்திய அரசு, தமிழக அரசுக்கு ஒப்பந்த அடிப்படையில் அளிக்க வேண்டும்.
  • தமிழக அரசுக்கு ஒப்பந்த அடிப்படையில் அளித்தால் உடனடியாக தடுப்பூசி உற்பத்திக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
  • தடுப்பூசி உற்பத்தி மையத்தை முழு சுதந்திரத்துடன் தமிழக அரசு இயக்க அனுமதி அளிக்க வேண்டும்.
  • தனியார் நிறுவன உதவியுடன் செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை செயல்படுத்துவோம்.