தமிழக முதல்வர் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் !

இந்தியாவில் கரோனா தொற்றுக்கு தடுப்பூசி போடும் பணி ஜனவரி மாதம் தொடங்கியது.இந்நிலையில் ,பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் உள்பட அரசியல் தலைவர்கள், மக்களுக்கு முன்னுதாரணமாக தடுப்பூசியை போட்டுக் கொண்டனர்.

மேலும் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.பின்பு பேசிய அவர், ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதாக பரவக் கூடிய தொற்று நோயாகும். தமிழகத்தில் 2,682 இடங்களில் அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப நிலையங்களிலும் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது.

924 தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. கோவிஷீல்டு 30.47 லட்சமும், கோவாக்சின் 5.67 லட்சம் தடுப்பூசிகள் மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளது என்றார்.