இடைக்கால பட்ஜெட்டில் காவல்துறைக்கு 9,567.93 கோடி நிதி ஒதிக்கீடு

காவல்துறைக்கு 9,567.93 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சித்துறைகாக 22,218.58 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

பயிர்கடன் தள்ளுபடி திட்டத்திற்காக, 2021-22ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டில் 5,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், விவசாய்துறைக்கு 11,982.71 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என தமிழக துணை முதலமைச்சரும், நிதயமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தனது இடைக்கால பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

2020-21ம் ஆண்டின் திருத்த மதிப்பீடுகளில், ஒட்டுமொத்தமாக மாநில அரசின் சொந்த வரி வருவாய், 1,09,968.97 கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொகையானது 2020-21ம் ஆண்டு வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் வருவாயாக எதிர்பார்க்கப்பட்ட 1,33,530.30 கோடி ரூபாவை விட 17.64 சதவீதம் குறைவானது என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.