தலிபான்களின் பெண்களுக்கான சட்டங்கள் !

ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்கள் அந்த நாட்டுக்கு புதிய பெயராக இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கானிஸ்தான்’ என்று அதற்கு பெயர் சூட்ட இருக்கிறார்கள்.20 ஆண்டுகாலமாக அரசுக்கும் தலிபான்களுக்கும் இருந்த போர் தற்போது ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதன் மூலம் நிறைவடைந்துள்ளது.

தலிபான் என்கிற தீவிரவாத அமைப்பு தற்போது ஆப்கானிஸ்தானை தன் வசமாகியதன் மூலம் உலக நாடுகளை வியப்பில் ஆய்தியுள்ளது.தலிபான் ஆட்சி நடைபெற்றால் நிறைய சட்ட திட்டங்கள் மாறுவதோடு பெண்களின் நிலைமை மிகவும் மோசமடையும் என்று எண்ணப்படுகிறது.

அவர்கள் பெண்களுக்கு என்று தனி சட்டத்திட்டங்களை வைத்துள்ளனர்.இரத்த உறவினர் இல்லாமல் அல்லது பர்தா அணியாமல் பெண்கள் தெருக்களில் தோன்றக்கூடாது.

பெண்கள் ஹை ஹீல்ஸ் அணியக்கூடாது, ஏனெனில் எந்த ஆணும் ஒரு பெண்ணின் காலடிச் சத்தத்தைக் கேட்கக்கூடாது.ஒரு பெண் குரலை அந்நியர்கள் கேட்கக் கூடாது என்பதால் பெண்கள் பொது இடங்களில் சத்தமாக பேசக்கூடாது.

செய்தித்தாள்கள், புத்தகங்கள், கடைகள் அல்லது வீட்டில் பெண்களின் படங்களை புகைப்படம் எடுப்பது, படம் எடுப்பது மற்றும் காண்பிப்பது தடைசெய்யப்பட்டது.

வானொலி, தொலைக்காட்சி அல்லது பொதுக் கூட்டங்களில்பெண்களுக்கு தடை.மேலும் ஆண்களுக்கும் சில சட்டங்கள் உண்டு.இருப்பினும் தலிபான்கள் ஆட்சியில் பெண்கள் நிலைமை மிகவும் மோசமடையும் என்று கூறுகிறார்கள்.