டி20 உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கான பரிசுத் தொகையை அறிவித்தது ஐ.சி.சி.

டி20 உலகக் கோப்பை தொடர் வரும் 17-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14 வரையில் ஓமன் மற்றும் அமீரகத்தில் நடைபெற உள்ளது.

இந்த தொடரை இந்தியா ஹோஸ்ட் செய்கிறது. இந்த நிலையில் இந்த தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு கிடைக்க போகும் பரிசுத் தொகை குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.

இந்தியா உட்பட உலகின் தலைசிறந்த அணிகள் பங்கேற்று விளையாடும் இந்த தொடரில் டி20 உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது. இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 8 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட உள்ளது.

மேலும் அரையிறுதி போட்டியில் தோல்வியை தழுவும் இரண்டு அணிகளுக்கு தலா 4 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட உள்ளதாம்.

அதே போல சூப்பர் 12 மற்றும் குரூப் பிரிவு போட்டிகளில் தோல்வியை தழுவும் அணிகளுக்கும் பரிசு வழங்கப்பட உள்ளதாம். மேலும் ஒவ்வொரு போட்டியின் போதும் இன்னிங்ஸ்களுக்கு மத்தியில் இரண்டரை நிமிடம் டிரிங்ஸ் பிரேக் அளிக்கப்பட உள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.